ஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி

ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கே இவ்வேண்டுகோள். ஆங்கிலம் மொழி அறிவு அத்தியாவசியமாகி விட்ட இக்காலச் சூழமைவில் நாம் ஆங்கிலம் பிழையின்றி எழுத, பேச விரும்பினால் நாம் கட்டாயம் “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ள வேண்டும்.  “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ளாமல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது சாத்தியமே இல்லை எனலாம். இதோ இங்கே தமிழ் விளக்கத்துடன் “Irregular verbs” அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.  அவற்றை சரியான ஆங்கில உச்சரிப்புடன் பயிற்சி செய்வதற்கு உச்சரிப்பு ஒலிக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  பயிற்சிகளுக்கு இங்கே சொடுக்குங்கள். http://aangilam.blogspot.com/2008/05/irregular-verbs.html Advertisements

ஆங்கில மொழியும் அதன் சிறப்புப் பயன்பாடுகளும்

ஆங்கில மொழியில் நாம் எவ்வளவு திறமான இலக்கண விதிமுறைகளை கற்றிருந்தாலும், சொற்களஞ்சியங்களை மனனம் செய்து வைத்திருந்தாலும், ஆங்கில மொழியின் உரையாடலின் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து பயன்படுத்தல் வேண்டும். கணவன் மனைவியிடமும், தாய் பிள்ளையிடமும் மன்னிப்பு கேட்டல், “தயவுசெய்து” எனும் சொற்பதத்தையும் இணைத்துப் பேசுதல் ஆங்கில மொழியில் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும். ஆங்கில மொழியை கற்கும் நாமும் இவ்விதமான நாகரீகமான பேச்சு வழக்கைக் கடைப்பிடித்தல் மிக மிக அவசியம். அவற்றை ஆங்கில…